தம்பலகாமம் பொலிஸ் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Report Print Mubarak in அபிவிருத்தி
48Shares

தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்து.

குறித்த நிகழ்வு இன்று கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கபில ஜெயசேகர தலைமையில் நடைபெற்றுள்ளது.

தற்காலிக கட்டிடமொன்றில் இயங்கி வந்த பொலிஸ் நிலையம் 64 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் பெரேரா கோமரங்கடவெல, மூதூர், குச்சவெளி உதவி பொலிஸ் மா அதிபர்கள், பொலிஸ் நிலையங்கங்களின் பொறுப்பதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.