வவுனியா மாவட்டத்தில் 5000 வீடுகள் அமைக்க நடவடிக்கை

Report Print Aasim in அபிவிருத்தி
87Shares

வவுனியா மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் வருமானம் குறைந்த மக்களுக்கு ஐயாயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக 2950 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. கடந்த வருடமும் வவுனியா மாவட்டத்தில் வருமானம் குறைந்த மக்களுக்கு ஐயாயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 1500 வீடுகள் மீள்குடியேற்ற அமைச்சினாலும், 3500 வீடுகள் வீடமைப்பு அமைச்சினாலும் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

மீள்குடியேற்ற அமைச்சினால் அமைக்கப்பட்ட வீடுகளுக்கு தலா எட்டு லட்சம் ரூபா வீதம் செலவாகியுள்ளது. வீடமைப்பு அமைச்சினால் தலா ஐந்து லட்சம் ரூபா செலவில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நிர்மாணிக்கப்படவுள்ள ஐயாயிரம் வீடுகளையும் மீள்குடியேற்ற அமைச்சும் வீடமைப்பு அமைச்சும் இணைந்தே நிர்மாணிக்கவுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.