இலங்கைக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பம்

Report Print Shalini in அபிவிருத்தி

காசநோயை கட்டுப்படுத்துவதன் ஊடாக தென்ஆசியா நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தை பிடிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய காசநோய் கட்டுப்பாட்டு மற்றும் சுவாசநோய் பற்றிய அமைப்பின் கொழும்பு மாவட்ட அதிகாரி லக்மால் ரத்நாயக்க இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

2035ஆம் ஆண்டாகும் போது காசநோயை முழுமையாக இலங்கையில் இருந்து கட்டுப்படுத்துவது தமது அமைப்பின் நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த சில வருடங்களில் காச நோயாளர்களின் பதிவு குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.