மீண்டும் வடமாகாண ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்றார் குரே

Report Print Sumi in அபிவிருத்தி

ரெஜினோல் குரே வடக்கு மாகாண ஆளுநராக மீண்டும் இன்று தமது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றார்.

ஆளுநர் மாற்றத்தின் போது, மீண்டும் வடக்கு மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட வேண்டுமென பல தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கமைய கடந்த 13ம் திகதி வடக்கு ஆளுநராக ரெஜினோல்ட் குரேயை ஜனாதிபதி மீண்டும் நியமித்திருந்தார்.

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக அமைந்துள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த ரெஜினோல்ட் குரே,

“வடக்கு மக்களின் வேண்டுகோளிற்கமையவே தம்மை ஜனாதிபதி மீண்டும் வடக்கிற்கு அனுப்பியுள்ளதாக” கூறியுள்ளார்.