விவசாயத்திற்காக ஜனாதிபதியின் புதல்வி செய்த காரியம்

Report Print Steephen Steephen in அபிவிருத்தி

பொலன்னறுவை - ஹெலஹெர விவசாய குடியேற்ற திட்டத்தில் உள்ள வயல்களுக்கு சிறுபோக பயிர் செய்கைக்காக தண்ணீரை திறந்து விடும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மூத்த புதல்வி சத்துரிக்கா சிறிசேனவின் தலைமையில் இன்று நடைபெற்றது.

மொரகாஹகந்தை நீர்தேக்கத்தின் வேக கந்தை பகுதியில் இருந்து விவசாயத்திற்காக இந்த தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

அங்கு நடைபெற்ற சமய நிகழ்வுகள் மற்றும் தெய்வத்திற்கு பால் பொங்கிய பின்னர் பாலை தண்ணீரில் ஊற்றும் சம்பிரதாய நிகழ்வு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட சத்துரிக்கா சிறிசேன பாலை தண்ணீரில் ஊற்றியுள்ளார்.

இந்த நிகழ்வில் பொலன்னறுவை மாவட்ட அரசாங்க அதிபர் ரஞ்சித் ஆரியசிங்க உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.