தென்னிலங்கையில் தொடரும் அபாயம்! உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்குமா?

Report Print Vethu Vethu in அபிவிருத்தி
96Shares

தென்னிலங்கையில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள இன்புளுவென்சா என்ற உயிர் பறிக்கும் வைரஸ் தொற்று பல இடங்களுக்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது தென் மாகாணத்தில் பலர் உயிர்களை காவு கொண்டுள்ள இன்புளுவென்சா ஏ என்ற வைரஸ், சப்ரகமுவ மாகாணத்திற்கும் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான நிலையை கருத்திற் கொண்டு வைத்தியசாலையை சீரான நிலைமையில் வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவை இயக்குனர் கப்பில தெரிவித்துள்ளார்.

இன்புளுவென்சா ஏ வைரஸ் தொற்றியுள்ள சிலர் சப்ரகமுவ மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை தற்போது தெற்கில் பரவியுள்ள இன்புளுவென்சா வைரஸ் தொற்றில் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இயக்குனர் கூறியுள்ளார்.

கராப்பிட்டிய வைத்தியசாலையில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குறித்த நோயினால் பாதிக்கப்பட்ட 2510 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

விசேட நடவடிக்கைகள் மூலம் தொற்று நோயை கட்டுப்படுத்த முடியும் என மாகாண சுகாதார சேவை இயக்குனர் கப்பில நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கராப்பிட்டி வைத்தியசாலையில் இன்புளுவென்சா தொற்று காரணமாக சுமார் 15 சிறுவர்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.