வெறிச்சோடி காணப்படும் வவுனியா பழைய பேருந்து நிலையத்தை அழகுபடுத்த நடவடிக்கை

Report Print Theesan in அபிவிருத்தி

வவுனியா பழைய பேருந்து நிலையம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றது. அங்குள்ள வியாபார நிலையங்களில் வியாபாரமின்றி இழுத்து மூடவேண்டிய நிலைக்கு கடை உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன், மக்கள் வரவின்றி வியாபாரம் மேற்கொள்ளமுடியாமல் இருப்பதால், வங்கிகளில் பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலை எற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை பேருந்து நிலையத்திற்குச் சென்ற நகரசபை ஊழியர்கள் பேருந்து நிலையத்திலுள்ள கடைத் தொகுதிகளை அளவீடு செய்து வருகின்றார்கள்.

இதையடுத்து அவர்களிடம் எதற்காக அளவீடுகளை மேற்கொண்டு வருகின்றீர்கள் என வினவியபோது,

வியாபார நிலையங்கள் அமைந்துள்ள கட்டடங்களுக்கு வர்ணம் பூசுவதற்கும் அழகுபடுத்துவதற்கும் அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வடமாகாண முதலமைச்சரின் அதிரடி முடிவால் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்து சேவைகள் இடம்பெறுவது நிறுத்தப்பட்டுள்ளதுடன் பேருந்து சேவைகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்தில் மேற்கொள்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து பழைய பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற சேவைகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டபோது பழைய பேருந்து நிலையத்திலுள்ள வர்த்தக நிலையங்களில் மக்கள் வரவின்றி வெறிச்சோடி காணப்படுகின்றது.

இதையடுத்து நஸ்டமடைந்த நான்கு வியாபார நிலையங்கள் பழைய பேருந்து நிலையத்தில் இழுத்து மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.