இலங்கைக்கு ஈரான் அழைப்பு

Report Print Ajith Ajith in அபிவிருத்தி

தெஹிரானில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள 12ஆவது பொருளாதார ஒத்துழைப்பு கூட்டு ஆணையத்தில் பங்கேற்குமாறு இலங்கைக்கு ஈரான் அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கையின் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஸாத் பதியூதீனை நேற்று முன்தினம் சந்தித்தபோது, இலங்கைக்கான ஈரான் தூதுவர் மொஹமட் ஷேல் அமிரானி இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

இதேநேரம் கடந்தத மாதம் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெஹிரானுக்கு மேற்கொண்ட விஜயம் மிகவும் சிறந்தாகவும் பயன்மிக்கதாகவும் இருந்ததென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, 11ஆவது பொருளாதார ஒத்துழைப்பு கூட்டு ஆணையம் கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கொழும்பில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.