ஜனாதிபதியின் மக்கள் சேவை நிகழ்ச்சித் திட்டம் யாழில் திறந்து வைப்பு

Report Print Suthanthiran Suthanthiran in அபிவிருத்தி
70Shares

ஜனாதிபதியின் மக்கள் சேவையின் யாழ். மாவட்ட எட்டாவது தேசிய நிகழ்ச்சித் திட்டம் இன்று திங்கட்கிழமை காலை யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் செயலகங்களின் வழி நடத்தலில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் யாழ்.அரச அதிபர் தலைமையில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், மாகாண முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் பிரதேச செயலர்கள் அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

காணொளி - சுமி