656,298 வெற்று சமையல் எரிவாயு கொள்கலன்களை கொள்வனவு செய்ய அனுமதி

Report Print Ajith Ajith in அபிவிருத்தி

எரிவாயுவை விநியோகிப்பதற்காக பயன்படுத்தப்படும் எரிவாயு கொள்கலன்களை லிற்றோ சமையல் எரிவாயு இலங்கை நிறுவனம் கொள்வனவு செய்ய உள்ளது.

இதற்கமைய, லிற்றோ சமையல் எரிவாயு இலங்கை நிறுவனத்தினால் எரிவாயுவை விநியோகிப்பதற்காக பயன்படுத்தப்படும் பாதுகாப்பு வேல்வ் உடனான 6 இலட்சத்து 56 ஆயிரத்து 298 வெற்று எல்.பி.சமையல் எரிவாயு கொள்கலன்கள் (பல்வேறு அளவிலானவை) கொள்வனவு செய்யப்பட உள்ளன.

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான கொள்வனவு குழுவின் சிபாரிசுக்கு அமைய இந்தியாவின் ஆ.ளு.ஆயரசலைய இடம் 2057.1 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட உள்ளது.

இதற்காக அரச தொழிற் துறை மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.