கிழக்கு மாகாண ஆளுநருக்கு புதிய பதவி

Report Print Shalini in அபிவிருத்தி

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி செயற்பாடுகளை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் உறுப்பினராக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான நியமனக் கடிதமும் கிழக்கு ஆளுநருக்கு உத்தியோகப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு ஆளுநரின் ஊடகச் செயலாளர் ஹஸன் அலால்தீன் தெரிவித்தார்.

செய்திகள் - ஹஸ்பர் ஏ ஹலீம்

Latest Offers

loading...