பிராந்திய விமான நிலையமாக மாறவுள்ள பலாலி விமான நிலையம்! கூட்டத்தில் முக்கிய தீர்மானம்

Report Print Shalini in அபிவிருத்தி

பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன், பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கும், இவ்வாண்டு இறுதிக்குள் பலாலிக்கான அனைத்துலக விமான சேவையை ஆரம்பிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவுக்கும் இடையில் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

பலாலி விமான நிலையத்தைப் பிராந்திய விமான நிலையமாக விரிவுபடுத்த இந்தியா இணங்கியுள்ளது.

பலாலி விமான நிலையத்துக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிலப்பரப்பிலேயே, முழுமையான விரிவாக்கப் பணிகள் இடம்பெறவுள்ளன.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவிலிருந்து முதலாவது அனைத்துலக விமானத்தை பலாலியில் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

அனைத்துலக விமானங்களின் வருகையை உறுதிப்படுத்துவதற்கான தொலைத்தொடர்பு சாதனங்களை பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்தியாவுக்கான விமானப் போக்குவரத்து நடைபெறும்போதே, பலாலி விமான நிலைய ஓடுபாதைகள் மற்றும் விரிவாக்கப் பணிகள் இடம்பெறும்.

இந்த விமான நிலைய விரிவாக்கத்தின் ஊடாக பலருக்கு தொழில்வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படும்.

மேலும், திருச்சி, சென்னை விமான நிலையங்களிலிருந்து முதற்கட்டமாக, பலாலிக்கான விமானச் சேவைகள் ஆரம்பிக்கப்படும்” என்று சுமந்திரன் கூறியுள்ளார்.

Latest Offers

loading...