பலாலி விமான நிலையத்தில் இந்திய ஆய்வுக் குழு

Report Print Gokulan Gokulan in அபிவிருத்தி

யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையம் தொடர்பில் ஆய்வு ஒன்றை மேற்கொள்வதற்காக இந்திய குழுவினர் விஜயம் செய்யவுள்ளனர்.

பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்ட நிலையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

குறித்த ஆய்வுக்காக 3 அதிகாரிகளை கொண்ட குழுவினர் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

இதில், பலாலி விமான நிலையத்தின் அமைவிடம் மற்றும் ஓடுபாதையின் நிலை குறித்து இவர்கள் ஆய்வினை மேற்கொள்ள உள்ளதோடு ஆய்வு தொடர்பான அறிக்கை இந்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.