முல்லைத்தீவில் உள்ளூர் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் ஓர் முயற்சி

Report Print Suman Suman in அபிவிருத்தி

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுதந்திரபுரம் பகுதியில் முல்லை, பால் பதனிடும் தொழிற்சாலை இம்மாத ஆரம்பத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அப்பகுதியில் உள்ள பலரும் தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் உள்ள கிராமங்களில் இருந்து பால் கொள்முதல் செய்து குளிரூட்டுதல், பதப்படுத்துதல் மற்றும் தரம் வாரியாக வகைப்படுத்தல் போன்ற செயன்முறைகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் நுகர்வோருக்கு விநியோகிக்கப்படுகிறது.

அதன் பின்னர் எஞ்சிய கொழுப்பு, நெய், வெண்ணை அல்லது பால் கட்டிகள் என்பன கடைகளுக்கு விற்கப்படுகிறது.

இத் தொழிற்சாலையில், அடைக்கப்பட்ட பால், தயிர் ,நெய் ,பால் ரொபி, என்பன தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.

முல்லை பால் பதனிடும் தொழிற்சாலை கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி வேலைக்காக ஓடிக் கொண்டிருப்போருக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவது மட்டுமல்லாது, கணவனை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என பலருக்கு தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் ஒரு நிலையமாக உள்ளது.

இதன் மூலம் மாடு வளர்ப்போருக்கு நிரந்தரமாக தொடர்ந்து இந்த தொழிற்சாலைக்கு பாலினை விநியோகம் செய்ய முடியும், இதனால் கிராமங்களிலுள்ள பலரது வாழ்வாதாரத்திற்கு இந்த முல்லை பால் தொழிற்சாலை கை கொடுக்கிறது.

புலம் பெயர் தேசத்தில் வசித்து வரும் தவசீலன் என்பவரால் இந்த முல்லை பால் நிலையம் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.