அல்-மஜ்மா கிராமத்திற்கான அபிவிருத்தி திட்டங்கள்

Report Print Mubarak in அபிவிருத்தி

திருகோணமலை - அல்-மஜ்மா கிராமத்திற்கான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அல்-மஜ்மா பகுதியின் கேட்போர் கூட கட்டடம் மற்றும் பிரதான வீதிகளுக்கான அடிகல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த அபிவிருத்தி திட்டத்திற்கு கிழக்கு மாகாண உள்ளூராட்சி, கிராம அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின் கீழ் கிராம அபிவிருத்தி திணைக்களத்திற்கென ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை 10 மில்லியன் ரூபா நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஏ.எல்.சமீம் தலமையில் நடத்தப்பட்ட நிகழ்வில், தவிசாளர் ஐ.டி.அஸ்மி, பிரதேச சபை உறுப்பினர்களான எம்.பி.எம்.ஜௌபர், ஏ.எல்.ஜெஸ்மீன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.வே.துஸ்யந்தன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.இர்பான் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.