புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் கட்டுமான பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 ஏக்கர் காணி

Report Print Yathu in அபிவிருத்தி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையின் மேலதிக கட்டுமானப் பணிகளுக்காக 10 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டு அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் இதன் கட்டுமானங்களை விஸ்தரிப்பற்கான போதிய இட வசதி தற்போது வைத்தியசாலை அமைந்துள்ள பகுதியில் இல்லாத நிலை காணப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த வைத்தியசாலையில் குறிப்பிட்ட சில சிகிச்சை பிரிவுகளையும் கட்டுமானங்களையும் அமைப்பதற்கான பொருத்தான காணி கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையில் புதுக்குடியிருப்பு பரந்தன் ஏ-35 வீதியின் கைவேலி பகுதியில் 10 ஏக்கர் காணி தெரிவு செய்யப்பட்டு வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட நிலையில் இக்காணிகளை பல்வேறு அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.