உயிலங்குளத்தை புனரமைப்பதற்கு 20 மில்லியன் ரூபா நிதி தேவை

Report Print Yathu in அபிவிருத்தி

முல்லைத்தீவு - துணுக்காய் உயிலங்குளத்தை புனரமைப்பதற்கு தேவையான நிதி மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி அணைக்கட்டினைப் புனரமைப்பதற்கு சுமார் 20 மில்லியன் ரூபா நிதியும் அணைக்கட்டின் கீழ் சேதமடைந்து காணப்படும் வீதியினை அமைப்பதற்கு 40 மில்லியன் ரூபாவும் தேவையென துணுக்காய் பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிதியை பெற்று கொள்ளும் சந்தர்ப்பத்தில் இவற்றை புனரமைக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட கோட்டை கட்டிய குளம், தென்னியன் குளம், அம்பலப்பெருமாள் குளம் போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்து வீதியின் குறிப்பிட்ட பகுதி உயிலங்குளம் அணைக்கட்டின் மீதான பாதையாக காணப்படுகின்றது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பெய்த மழை காரணமாக உயிலங்குளம் அணைக்கட்டு சேதமடைந்து அதனூடான போக்குவரத்துக்கள் தடைப்பட்ட நிலையில் குறித்த பகுதியை இராணுவத்தினரும், பொதுமக்களும் இணைந்து மக்கள் போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் தற்காலிகமாக புனரமைத்திருந்தனர்.

குறித்த பகுதியை அவசரமாக மீண்டும் புனரமைக்க வேண்டிய தேவை காரணமாக இவ் அணைக்கட்டினை புனரமைத்து தருமாறும் இதன் கீழான விவசாயிகளும், அணைக்கட்டின் கீழாக காணப்படும் வீதியினை புனரமைத்துத் தருமாறு பிரதேச மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.