யாழில் யுத்தத்திற்கு பின் மீண்டும் புத்துயிர் பெறும் பெளத்த விகாரை

Report Print Suthanthiran Suthanthiran in அபிவிருத்தி

யுத்த காலத்தில் அழிவடைந்த காங்கேசன்துறை தயிலிட்டி திஸ்ஸ விகாரையை மீள்புனர்நிர்மாணம் செய்வதற்கான நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வு பாதகட விமலஞான தேரர் தலைமையில் நேற்று பிற்பகல் நடைபெற்றுள்ளது.

இதில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கலந்து கொண்டு விகாரை அமைவதற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.

1946ஆம் ஆண்டு எழுதப்பட்ட உறுதி அடிப்படையில் பாதகட விமலஞான தேரர் குறித்த விகாரைக்குரிய காணியினை இனங்கண்டு அதனை மீள நிர்மாணிப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளார்.

குறித்த விகாரை பல நூற்றாண்டுகளாக இப்பகுதியில் இருந்து வந்துள்ளது. 1954.05.17ஆம் திகதி இறுதியாக வெசாக் பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது.

இதன் பின்னர் நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தினால் குறித்த விகாரை முற்றாக அழிவடைந்திருந்தது.

இந்த நிகழ்லில் ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், பிரதியேக செயலர் ஜே.எம்.சோமசிறி, கிராம சேவையாளர், இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.