அநுராதபுரத்தில் மாதிரி கிராம வீட்டுத் திட்டம் கையளிக்கும் நிகழ்வு

Report Print Gokulan Gokulan in அபிவிருத்தி

அநுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட செமட்ட செவன வீடமைப்புத் திட்டத்தின் 111ஆவது மாதிரி கிராம வீட்டுத் திட்டம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த மாதிரி கிராம வீட்டுத் திட்டத்தை நேற்று அமைச்சர் சஜித் பிரேமதாச மக்களிடம் வழங்கி வைத்துள்ளார்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் இதன்போது மக்களிடம் கையளிக்கப்பட்டன.

நிகழ்வில் சமூக வலுவூட்டல் அமைச்சர் பீ.ஹரிசன், அநுராதபுர நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம உட்பட அரச உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.