திருகோணமலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

Report Print Mubarak in அபிவிருத்தி

திருகோணமலை - சேருவில பிரதேசத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விஜயம் ஒன்றை மேற்கொண்டு, சேருவில பௌத்த விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

சேருவில விகாரைகளுக்கான புதிய இரு கட்டடங்களை கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் பங்கேற்புடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகப்பூர்வமாக திறந்து வைத்தார்.

47 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படும் வீதி வேலைத் திட்டம், சேருவில பிரதேசத்தில் நான்கு வேலை திட்டங்களான வீதி அபிவிருத்தி, மீன்பிடி, காணி, சுகாதார சேவைகளையும் ஆரம்பித்து வைத்துள்ளார்.

சேருவில விகாரை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 135 இலட்சம் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த மதகுருக்களுக்கான தங்குமிட வசதியை கொண்ட கட்டடமும், 20 மில்லியன் ரூபா செலவில் பிரித் பாராய வழிபாடு மண்டபமும் இதன் போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் சேருவில விகாரை வீதிக்கான புதிய வீதி ஒன்றும் மேலும் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பெருந்தோட்ட கைத் தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க, கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீத் பெரேரா, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் உட்பட உயரதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்றனர்.

காணொளி - அப்துல்சலாம் யாசீம்

Latest Offers