ஒரு வாரத்துக்குள் வாக்குறுதியை நிறைவேற்றிய அமைச்சர்!

Report Print Abdulsalam Yaseem in அபிவிருத்தி

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காக பிரதி அமைச்சர் பைசல் காசீம் 60 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார்.

கடந்த மாதம் 25 ஆம் திகதி பிரதி அமைச்சர் மேற்படி வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்குள்ள குறைபாடுகளை பார்வையிட்டார்.

அந்தக் குறைபாடுகளை தீர்ப்பதற்காக உடனடி நிதி உதவியை வழங்குவதாக வைத்தியசாலை அதிகாரிகளிடம் வாக்குறுதி வழங்கினார்.

அவ்வாறு வாக்குறுதி வழங்கி ஒரு வாரத்துக்குள் நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, ஒதுக்கப்பட்டுள்ள 60 இலட்சம் ரூபாவில் 50 இலட்சம் ரூபா வைத்தியசாலையின் பாரிய திருத்த வேலைகளுக்கும் 10 இலட்சம் ரூபா நீர் விநியோக மற்றும் புனரமைப்பு வேலைகளுக்கும் செலவிடப்படவுள்ளது.

வைத்தியசாலையின் ஏனைய குறைபாடுகளையும் தீர்த்து வைப்பதற்கு கட்டம் கட்டமாக நடவடிக்கை எடுப்பதாக பிரதி அமைச்சர் பைசல் காசீம் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers