தமிழர் தாயகத்தில் 25 ஆயிரம் வீடுகள்! அமைச்சரவைக்கு வருகின்றது புதிய பத்திரம்

Report Print Rakesh in அபிவிருத்தி

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான குழுவின் மேற்பார்வையில் வடக்கு மற்றும் கிழக்கில் அமைக்கப்படவுள்ள 25 ஆயிரம் வீட்டுத் திட்டத்திற்குரிய அமைச்சரவைப் பத்திரம் இன்று கையளிக்கப்படவுள்ளதாக தகவல் பெறப்பட்டுள்ளது

குறித்த வீடமைப்பு பணி எந்த அமைச்சின் ஊடாக முன்னெடுப்பது என்பதில் இழுபறி நிலை இருந்து வந்துள்ளதுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்களான சுவாமிநாதன், மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினால் வீட்டுத் திட்டம் மேற்பார்வை செய்யப்படும் என்றும், ஜனாதிபதி விசேட செயலணியின் செயலர் வே.சிவஞானசோதி இந்த திட்டத்தை முன்னெடுப்பார் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவை செயற்படுத்துவதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் பிரதமரின் அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.