மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் பல்வேறு அபிவிருத்தி திட்ட பணிகள் ஆரம்பம்

Report Print Ashik in அபிவிருத்தி

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய மடு கிராமத்திற்கு சுமார் 2.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் எம். நவ்பீல் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் இன்றைய தினம் காலை வைபவ ரீதியாக இந்நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் நடை முறைப்படுத்தப்பட்ட இவ் வேலைத்திட்ட நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் பிரத்தியோக செயலாளர் றிப்கான் பதியுதீன் கலந்து கொண்டு குறித்த வேலைத்திட்டத்தினை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதன் போது மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரியமடு கிழக்கு ஜாமி உல் அக்சர் ஜும்மா பள்ளிவாசல் சுற்றுமதில், பெரிய மடு மேற்கு பள்ளிவாசல் சுற்றுமதில், பெரியமடு மத்திய மகா வித்தியாலயம் நூலகம், பெரிய மடு கிழக்கு ஆரம்ப நெறி பாடசாலை நுழைவாயில்,பெரிய மடு காயா நகர் பள்ளிவாயல் சுற்றுமதில் அமைத்தல் போன்றவற்றிக்கான வேலைத்திட்டங்கள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்டு 1990ம் ஆண்டு இடம் பெயர்ந்து மீண்டும் தமது சொந்த மண்ணிற்கு மீள் குடியேறும் மக்களுக்கு முழுமையான வசதிகளை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் குறித்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர் கால சந்ததிகள் கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளில் முன்னேற்றவும், சொந்த மண்ணை அபிவிருத்தி அடைய வைக்க வேண்டும் என்ற தீவிர முயட்சியின் வெளிப்பாடாகவே குறித்த நிகழ்வு இடம் பெற்றுள்ளது.

இதில் சிறப்பு விருந்தினராக மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் செல்லத்தம்பு, மன்னார் பிரதேச சபை தவிசாளர் எம்.முஜாஹிர், மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர், மீள் குடியேற்ற செயலணி மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீப் ரகுமான், மாந்தை உப்புக்கூட்டுத்தாபன இணைப்பாளர் எம்.அமீன் மற்றும் மாந்தை இணைப்பாளர் எம்.சனூஸ் ஆகியோரும், கிராம மக்கள் என பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.