கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க தீர்மானம்

Report Print Mubarak in அபிவிருத்தி

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் முயற்சியினால் கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கல்வி அமைச்சுக்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த எம்.எஸ்.தௌபீக்கினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த இடத்திற்கு எம்.எஸ்.தௌபீக் உடனே விஜயம் செய்து அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடிய பின்பு, கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி, கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவித்தாரன, மேலதிக செயலாளர் ஹேமந்த, முஸ்லிம் பிரிவுக்கான பணிப்பாளர் தாஜுதீன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.

அதனையடுத்து எம்.எஸ்.தௌபீக், வருகின்ற ஒக்டோபர் மாதம் 2ம், 3ம் மற்றும் 4ம் திகதிகளில் தொண்டர் ஆசிரியர்களின் ஆவணங்களை பரிசீலித்து விட்டு நியமனம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.