மட்டகளப்பில் இந்திய அரசின் உதவியுடன் 20 ஆயிரம் வீடுகள் அமைக்க திட்டம்

Report Print Dias Dias in அபிவிருத்தி

மட்டகளப்பு மாவட்டதிதில் இந்திய அரசின் உதவியுடன் 20 ஆயிரம் வீடுகள் அமைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் தலைமையில் இன்று மாவட்ட செயலகத்தில் இது குறித்த கலந்துரையாடல்கள் பிரதமர் அலுவலகத்தின் ஒழுங்கமைப்பின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த கலந்துரையாடளின் போது மட்டகளப்பு மாவட்டத்தில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களுக்கான வீடு தேவை, அத்தியாவசிய சுகாதாரம் மற்றும் மலசகூட வசதிகள் போன்ற விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதன்போது, 20 ஆயிரம் வீடுகள் அமைப்பதற்கான செயற்பாடுகள் ஐந்து நிறுவனங்களின் ஊடாக முன்னெடுக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு, விவசாயம், கால்நடை போன்றவற்றுக்கான பெறுமதி சேர்க்கை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாவட்ட செயலக அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Latest Offers