அடுத்த ஆண்டு முதல் அரிசிக்கான நிர்ணய விலை

Report Print Shalini in அபிவிருத்தி

அடுத்த ஆண்டு முதல் அரிசிக்கான நிர்ணய விலையை அறிவிப்பதற்கு விவசாய அமைச்சு முடிவெடுத்துள்ளது.

மேலும் அரிசியின் விலையை 10 ரூபாவால் குறைக்கவும் அரசு தீர்மானித்துள்ளது.

இது குறித்து முதலாளிமார்களுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாகவும் இதற்கு முதலாளிமார் சம்மேளனம் தனது ஆதரவினை வழங்கியுள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த மாதம் முதல் P.M.B எனும் புதியவகை அரிசியை சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் இதனை அனைத்து சதொச நிலையங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.