இலங்கையின் முதலாவது பெண்கள் பாடசாலைக்கு புதிய வாயிற்கதவு

Report Print Akkash in அபிவிருத்தி

சுமார் 150 வருடம் பழமையான கொழும்பு - வுல்வெண்டால் பெண்கள் உயர்தர பாடசாலைக்கு புதிய வாயிற்கதவு பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணசபை உறுப்பினர் பாயிஸ்ஸின் நிதி ஒதுக்கீட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நேற்று காலை பாடசாலை வளாகத்தில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

இதன்போது பாடசாலையின் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல அதிபர்கள் அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.

வுல்வெண்டால் பெண்கள் உயர்தர பாடசாலையானது இலங்கையின் முதலாவது பெண்கள் பாடசாலை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இதன்போது பாடசாலையின் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.