கிளிநொச்சி வைத்தியசாலைக்கு நவீன உணர்வகற்றும் இயந்திரம்

Report Print Suman Suman in அபிவிருத்தி

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு நவீன உணர்வகற்றும் இயந்திரம் ஒன்று மத்திய சுகாதார அமைச்சினால் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

சத்திர சிகிச்சையின்போது நோயாளர்களை மயக்க நிலையில் பேணுவதற்கு உதவும் இந்த நவீன உணர்வகற்றும் இயந்திரம் (Universalization of the United N) ஒன்று கொழும்பு சுகாதார அமைச்சினால் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையின் நீண்டகால அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இந்த உணர்வகற்றும் இயந்திரம் காணப்பட்டுள்ளது.

இதையடுத்து, அமெரிக்காவிலிருந்து வருவிக்கப்பட்ட 20 இலட்சம் ரூபாய் பெறுதியான இந்த நவீன இயந்திரத்தின் உதவியுடன் சத்திரசிகிச்சைகளின் போது மேற்கொள்ளப்படும் உணர்விழப்பு சிகிச்சை வசதிகள் மேலும் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் புதிதாக கடமையைப் பொறுப்பேற்ற கிளிநொச்சி வைத்தியசாலை பணிப்பாளர் மத்திய சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் வைத்தியசாலையின் அத்தியாவசிய அவசர தேவைகள் தொடர்பாக மேற்கொண்ட கலந்துரையாடல்களை தொடர்ந்து இந்த இயந்திரத்தைத் தற்போது அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.