மட்டக்களப்பு - சந்திவெளி வைத்தியசாலை வீதி புனரமைப்பு

Report Print Navoj in அபிவிருத்தி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு, சந்திவெளி வைத்தியசாலையின் முன் வீதி கொங்கிறீட் வீதியாக புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையிலேயே குறித்த வேலைத் திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்து கொண்டு வேலைத் திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதில் வாழைச்சேனை பிரதேசசபை உறுப்பினர் கி.சேயோன், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிரான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அத்தோடு சந்திவெளி வைத்தியசாலை முன்வீதி மக்களுடன் வீதி புனரமைப்பு தொடர்பாக கலந்துரையாடி, மீதமாக உள்ள வீதியையும் புனரமைப்பு செய்து தருவதாக உறுதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாலையடித்தோனா ஸ்ரீ முருகன் ஆலய மடப்பள்ளி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நடைபெற்றுள்ளது.

ஆலய தலைவர் எஸ்.புவனேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கி.சேயோன், ஆலய நிர்வாகத்தினர் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளனர்.

கொட்டகை மூலம் அமைக்கப்பட்ட மடப்பள்ளி கிழே விழும் நிலையில் இருந்த நிலைமையில் இதனை புனரமைப்பதற்கு எமக்கு நிதி வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவிப்பதாக ஆலய தலைவர் எஸ்.புவனேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இதில் வீதி புரமைப்புக்கு 120 இலட்சம் ரூபாவும், பாடசாலை மைதானங்கள் புனரமைக்க 50 இலட்சம் ரூபாவும், பாடசாலைகளின் மலசல கூடங்கள் அமைக்க 20 இலட்சம் ரூபாவும், ஆலயங்கள் புனரமைக்க 50 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.