17 பாடசாலைகள் தரம் உயர்த்தப்படும் - ரோஹித்த

Report Print Abdulsalam Yaseem in அபிவிருத்தி

கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 2019ஆம் ஆண்டில் 17 கல்வி வலயங்களிலும் 17 பாடசாலைகள் பெயரிடப்பட்டு சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகளாக அவை மாற்றியமைக்கப்படவுள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணம் கல்வி ரீதியில் தாம் ஆளுநராக பதவியேற்ற போது 9ம் இடத்தில் காணப்பட்டதாகவும் தற்போது கல்வி ரீதியான அபிவிருத்தியை இலக்காக கொண்டு பல்வேறு வகையான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

க.பொ.த.சாதாரண தர பெறுபேறுகளின் பிரகாரம் இம்முறை 6ஆம் இடத்தை கிழக்கு மாகாணம் பெற்றுக்கொள்ள கூடும் என்பது தமது எதிர்பார்ப்பாக அமைவதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.

கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பாடங்களை போதிப்பதற்கான ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ந்து நிலவுவதாகவும் இன்னும் 2000ஆசிரியர்களை இணைத்து கொள்வதற்கான வெற்றிடம் காணப்படுவதாகவும் அரசாங்கத்தின் அனுமதி கிடைக்கப்பெறுமாயின் வெகுவிரைவில் அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

Latest Offers