இரணைமடு குளத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் பாரிய நிதி

Report Print Yathu in அபிவிருத்தி

கிளிநொச்சியில் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்ட இரணைமடுக்குளம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பாரிய நிதியில் மீள் புனரமைக்கப்பட்டுள்ளது.

2178 மில்லியன் ரூபா செலவில் குறித்த குளம் புனரமைக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தின் பாரிய நீர்பாசனக் குளங்களில் ஒன்றாகக் காணப்படுகின்ற இரணைமடுக்குளம் காணப்படுகின்றது.

கடந்த முப்பதைந்து வருடங்களுக்கு மேலாக எந்தவித அபிவிருத்திகளும் இன்றி காணபபட்ட இரணைமடுக்குளம் விவசாயிகளின் கோரிக்கைகளையடுத்து இலங்கை அரசாங்கத்தினால் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 1, 06 500 ஏக்கர் கன அடி நீர்க்கொள்ளளவாகக் காணப்பட்ட இக்குளம் மேலும் இரண்டு அடியால் உயர்த்தப்பட்டு தற்போது 1,19 500 அடி ஏக்கர் நீர் தேக்கப்பட்டுள்ளது.

Latest Offers