வாலமன்கேணி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சுற்று மதிலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Report Print Navoj in அபிவிருத்தி

வாலமன்கேணி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கு ஒதுக்கப்பட்ட ஐந்து இலட்சம் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஆலயத்திற்கான சுற்று மதில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுற்று மதிலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனால் 250 இலட்சம் ரூபா நிதி வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டது.

இதில் வீதி புரமைப்புக்கு 100 இலட்சம் ரூபாவும், பாடசாலை மைதானங்கள் புனரமைக்க 50 இலட்சம் ரூபாவும், ஆலயங்கள் புனரமைக்க 100 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்றை தினம் நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன், ஆலய நிர்வாகத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அத்தோடு வாகரை, புளியங்கண்டடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு ஒதுக்கப்பட்ட ஐந்து இலட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஆலய மகா மண்டபம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நடைபெற்றுள்ளது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார்.

Latest Offers