ஏறாவூரில் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி

Report Print Rusath in அபிவிருத்தி

பொது மக்களுக்கு குடி நீர் வசதியளிக்கும் திட்டத்தின் கீழ் ஏறாவூர், சவுக்கடி கிராம வீடமைப்புத் திட்டத்திலுள்ள சுமார் 70 தமிழ்க் குடும்பங்களுக்கு கிணறுகள் வழங்கும் ஏற்பாட்டில் முதற் கட்டமாக 4 கிணறுகளைக் கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

மீதமுள்ள நிலத்தடிக் கிணறுகளை மிக விரைவில் அமைத்துக் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த கிணறுகள் ஒவ்வொன்றும் சுமார் 15 ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் பயனாளிகள், அமைபாளர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

Latest Offers