சிங்கப்பூர் நாட்டு வர்த்தக முதலீட்டாளர்கள் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம்!

Report Print Gokulan Gokulan in அபிவிருத்தி

சிங்கப்பூர் நாட்டு வர்த்தக முதலீட்டாளர்கள் குழுவினர் கிழக்கு மாகாணத்துக்கு இரு நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த விஜயம் 4 மற்றும் 5ஆம் திகதிகளில் இடம்பெற்றிருந்தன.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம தலைமையிலும், தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தக்சிதபோகொல்லாகம பங்குபற்றலுடனும் நடைபெற்ற கிழக்கு மாகாண முதலீடுகளை கொண்டு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகள் கலந்துரையாடப்பட்டன.

கிழக்கின் சுற்றுலா, மீன்பிடி, வர்த்தக உடன்படிக்கைகள் ஊடாக கிழக்கு மாகாணத்தில் சிங்கப்பூர் நாட்டின் முதலீடுகளை கொண்டு வருவதற்கான ஒரு விஜயமாகவும் இது அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நாட்டு முதலீட்டாளர்கள் திருகோணமலையில் தங்கியிருந்து பல இடங்களுக்கு களவிஜயங்களிலும் சந்திப்புக்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம தலைமையிலான குழுவினர் இதன்போது முதலீட்டாளர்களை சீனக்குடா விமான நிலையத்தில் வைத்து வழி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் சர்வதேச விமானம் ஒன்று இன்றைய தினமே சீனக்குடா விமான நிலையத்தில் இருந்து முதற் தடவையாக சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விசேட அம்சமாகும்.

Latest Offers