அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பிறந்த தினத்தை முன்னிட்டு திட்டங்கள் முன்னெடுப்பு

Report Print Abdulsalam Yaseem in அபிவிருத்தி

அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்டத்தில் 12 மாதிரி கிராமங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற உள்ளதாக வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் திருக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சரான சஜித் பிரேமதாச எதிர்வரும் 12ஆம் திகதி பிறந்த நாளை கொண்டாடவுள்ள நிலையில் இன்று எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே மாவட்ட முகாமையாளர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

அமைச்சருடைய பிறந்த தினத்தை சிறப்பிக்கும் முகமாக திருகோணமலை மாவட்டத்தில் 12 மாதிரி கிராமங்களை ஆரம்பிக்கவுள்ளதுடன், ஒவ்வொரு பிரதேச செயலகங்கள் ஊடாகவும் அத்திட்டத்தை அமுல்படுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அத்திட்டத்தின் கீழ் வீடுகளை நிர்மாணிப்பதற்காக வீடுகள் இல்லாத நபர்களின் பெயர் விபரங்களை வழங்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.