இலங்கைக்கு பெருந்தொகை நிதியை வழங்கும் இந்தியா!

Report Print Murali Murali in அபிவிருத்தி

இந்திய மத்திய வங்கி 400 கோடி அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கு உடன்பாட்டை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தலில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய மேலும் பில்லியன் கணக்கிலான நிதியினை பெற்றுக் கொள்ள இரு நாடுகளுக்குமிடையிலான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் இடம் பெற்று வருகின்றன.

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைய இந்த நிதி உதவியை வழங்க இந்திய மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.