அமைச்சரவை பத்திரத்தில் கல்வி அமைச்சர் கையொப்பம்

Report Print Mubarak in அபிவிருத்தி

கிழக்கு மாகாண தொண்டராசிரியர் பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க 811 தொண்டராசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவை பத்திரத்தில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கையொப்பமிட்டுள்ளார்.

அமைச்சில் வைத்து இன்று தொண்டராசிரியர் சங்க பிரதிநிதிகள் முன்னிலையில் கையொப்பமிட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃரூப் கல்வி அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினராக இருந்த போது அகில விராஜ் காரியவசமுடன் இணைந்து எடுத்த முடிவுக்கமையை அமைச்சரவை பத்திரத்தில் கையொப்பமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே 450 பேருக்கு அமைச்சரவை பத்திரம் உள்ள நிலையில் மிகுதியாக இருந்த அனைத்து தொண்டராசிரியர்களையும் இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவை பத்திரம் இன்றைய தினம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிகழ்வில் அமைச்சர் அப்துல் ஹலீம், அமைச்சர் வஜிர அபேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹேரூப், கல்வி உயர் அதிகாரிகள் மற்றும் தொண்டராசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.