கோப்புகள் கணினி மயப்படுத்தும் திட்டம் ராஜிதவினால் ஆரம்பித்து வைப்பு

Report Print Sinan in அபிவிருத்தி

சுகாதார போசாக்குகள் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரட்னவால் தேசிய மருந்துகள் ஒழுக்குமுறை திணைக்களத்தின் கோப்புகள் கணினி மயப்படுத்தும் திட்டத்தின் முதற்கட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தேசிய மருந்துகள் ஒழுக்குமுறை திணைக்களத்தில் நேற்று இத்திட்டத்தின் ஆரம்ப கட்ட நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இத்திட்டத்தில் தேசிய மருந்துகள் ஒழுக்குமுறை திணைக்களத்தின் கோப்புகளை தயாரித்தல், அபாயகரமான மருந்துக் கட்டுப்பாடு, மக்களுக்காக மருந்துகளை இறக்குமதி செய்தல், மருந்தகங்களை பதிவு செய்தல் ஆகிய துறைகள் கணினி மயப்படுத்தப்பட உள்ளது.

கோப்புகளையும், தரவு மற்றும் செயன்முறைகளை கையாளுதலை கணினி மயப்படுத்துவதன் ஊடாக திறமையாக செயற்படுதல் இதன் பிரதான நோக்கமாகும்.

இந்நிகழ்வில் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, தகவல் தொடர்பாடல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் அஜித்.பி.பெரேரா, சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் அசித் சில்வா உட்பட துறைசார் பலர் கலந்து கொண்டனர்.

Latest Offers