முறிப்பு பகுதியில் 26 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Report Print Suman Suman in அபிவிருத்தி

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் வீடமைப்பு திட்டத்தின் கீழ் முறிப்பு பகுதியில் 26 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று பகல் 12 மணியளவில் கிளிநாச்சி, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முறிப்பு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

அமைச்சர் சஜித் பிரேமதாசவின் வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த பகுதியில் 11 வீடுகள் மற்றும் 15 வீடுகளை கொண்ட இரு மாதிரி வீட்டு திட்டங்களை அமைக்கும் வகையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலக திட்டப்பணிப்பாளர், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளர், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers