பெருநகர அபிவிருத்தித் திட்டத்திற்கு தகுதி பெற்றுள்ள சீன நிறுவனங்கள்!

Report Print Ajith Ajith in அபிவிருத்தி

பெருநகர அபிவிருத்தி திட்டத்தின்கீழ் கொழும்பில் மேற்கொள்ளப்படவுள்ள மென்ரக ரயில் திட்டத்தை முன்னெடுக்க சீனாவின் 6 நிறுவனங்கள் தகுதிப்பெற்றுள்ளன.

பல்வேறு நாடுகளில் இருந்து கோரப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் இந்த நிறுவனங்கள் தகுதியைப்பெற்றுள்ளன.

இந்த திட்டத்தின்கீழ் கொழும்பு, கிருலப்பனை, பெப்பிலியான, கட்டுபெத்த ஊடாக மொரட்டுவை வரைக்கும் ஒரு ரெயில்சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இரண்டாவது ரயில் திட்டம், ராகம கொட்டாவ ஊடாக பத்தரமுல்லைக்கும் களனிக்கும் இடையில் மேற்கொள்ளப்படவுள்ளது.

மூன்றாவது திட்டம், கொழும்பு கோட்டைக்கும் கடவத்தைக்கும் இடையில் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் அறிக்கப்பட்டுள்ளது.