தெற்காசியாவில் அதிநவீன வசதிகளை கொண்ட நகரமாக மாறும் கொழும்பு நகரம்

Report Print Vethu Vethu in அபிவிருத்தி

தெற்காசியாவில் அதிநவீன வசதிகளை கொண்ட நகரமாக கொழும்பு துறைமுக நகரம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

துறைமுக நகரத்தின் முழுமையான பணிகள் 2040ம் ஆண்டளவில் நிறைவு பெறும் என கொழும்பு துறைமுக நகரத் திட்ட பணிப்பாளர் நிஹால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எனினும் கொழும்பு துறைமுக நகரம் 2025ம் ஆண்டளவில் முழுமையாக செயற்படக் கூடியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் இரண்டு வருட காலப்பகுதியில் இதன் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நீண்டகால பொருளாதார நன்மைகள் பல நாட்டுக்கு கிடைக்கும் என்றும் திட்டப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.