கிழக்கு மாகாண ஆளுநரினால் கட்டடம் திறந்து வைப்பு

Report Print Gokulan Gokulan in அபிவிருத்தி

மட்டக்களப்பு, காத்தான்குடி தளவைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒரு தொகுதி கட்டடம் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலையில் ஆண்களுக்கான சிகிச்சை விடுதி, பொது நோயாளிகளின் பயன்பாட்டிற்காக வைபவ ரீதியாக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இவ் விடுதி பாத்திமா பௌண்டேசன் அணுசரணையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் போது காத்தான்குடி தளவைத்தியசாலை கிழக்கு மாகாண ஆளுநரின் சேவைகளைப் பாராட்டி நினைவுச்சின்னம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.