யாழில் வட மாகாண ஆளுநரினால் பாடசாலை கட்டடங்கள் திறந்து வைப்பு

Report Print Sumi in அபிவிருத்தி

யாழ். நாவற்குழி மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிகளை கொண்ட வகுப்பறைக் கட்டடத் தொகுதி இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொண்ட வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், இலங்கைக்கான இந்திய பிரதி தூதுவர் சில்ப்பக் என் அம்புலே மற்றும் நிகழ்விற்கு தலைமை வகித்த பாடசாலை அதிபர் சின்னத்தம்பி பவளக்குமாரன் ஆகியோரால் உத்தியோகபூர்வமாக கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்திய இலங்கை நட்புறவு திட்டத்தின் கீழ் இந்திய அரசின் 14 மில்லியன் ரூபாய் நிதியில் இக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சாவகச்சேரி, டிறிபேக் கல்லூரியில் இரண்டு மாடிகளைக் கொண்ட புதிய வகுப்பறைக் கட்டடத் தொகுதியும் வடமாகாண ஆளுநரினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு கல்லூரி அதிபர் செல்லத்துரை பேரின்பநாதன் தலைமையில் இடம்பெற்றதுடன் இந்திய பிரதி தூதுவரும் இணைந்து கட்டடத்தை திறந்து வைத்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் 12 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் இக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.