3.12 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இரு பைலட் படகுகள் கொள்வனவு

Report Print Gokulan Gokulan in அபிவிருத்தி

கொழும்பு துறைமுகத்தின் செயற்றிறனை மேலும் அதிகரிக்கும் பொருட்டு இரு பைலட் படகுகளை கொள்வனவு செய்யவற்கான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவதாக அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அண்மையில் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

அமெரிக்க டொலர்கள் 3.12 மில்லியன் முதலீட்டில் கொழும்பு டொக்யாட் நிறுவனத்தின் மூலம் இந்த பைலட் படகுகள் கொள்வனவு செய்யப்படும்.

அமைச்சரவை அனுமதியில் வழங்கப்படுகின்ற நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த கொள்வனவு இடம்பெறுவதுடன் பத்து மாத காலத்திற்குள் இப் பைலட் படகுகளை தயாரித்து கொழும்பு துறைமுகத்திடம் கையளிக்க வேண்டும்.

அதனடிப்படையில் எதிர்வரும் டிசம்பர் 01ஆம் நாள் முதல் இப்புதிய படகுகளை கொழும்பு துறைமுகத்தின் பயன்பாட்டில் உள்வாங்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்சமயம் கொழும்பு துறைமுகத்திடம் 04 பைலட் படகுகள் இருப்பதுடன் 2007ஆம் ஆண்டிலே இவ்வணைத்து படகுகளும் இறுதியாக திருத்தியமைக்கப்பட்டது.

புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட இந்த புதிய இரு படகுகளுடன் துறைமுகத்தின் அடிப்படை வசதிகளை மேலும் வலுப்படுத்தலாமெனவும் இதன் மூலம் நவீனமயமான படகுகளை கையாளும் சந்தர்ப்பம் கொழும்பு துறைமுகத்திற்கு கிட்டுமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதுள்ள படகுகளை காட்டிலும் புதிதாக இணைத்துக்கொள்ளப்படவுள்ள பைலட் படகுகள் மூலம் மிக விரைவாக பயணிக்கலாம். அதில் நவீன தொழிநுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடங்களில் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த கப்பல்களின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்கின்றமையால் அதற்கு ஏற்றாற் போல் துறைமுகத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது அவசியமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...