பலாலி விமான நிலையத்தின் துரித அபிவிருத்தி பணிகள் 15ஆம் திகதி ஆரம்பம்

Report Print Steephen Steephen in அபிவிருத்தி

யாழ். காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையம் ஆகியவற்றை துரிதமாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் 15ஆம் திகதி இந்த அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த அபிவிருத்தி திட்டத்திற்கான அமைச்சரவை பத்திரம் அண்மையில் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டிருந்ததது. இந்த அபிவிருத்தித் திட்டத்திற்கு 1950 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான நிதியை வழங்க இந்தியா முன்வந்திருந்ததுடன் இந்திய பிரதிநிதிகள் இலங்கை வந்து அதற்கான ஆய்வு பணிகளையும் மேற்கொண்டிருந்தனர்.

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதாக கூறி, இதற்கு முன்னர் இலங்கை வந்திருந்த இந்திய நிறுவனம், துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடலில் மூழ்கியிருந்த கப்பல்களின் இரும்புகளை வெட்டி எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் இந்திய பிரதிநிதிகளும் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.