மாத்தறை, தெனியாய நகரத்திற்கு புதிய நகர திட்டம், சந்தை, 500 கட்டில்களுடன் கூடிய புதிய தேசிய வைத்தியசாலை அமைக்கப்படும் என அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
தெனியாய ஹொரகொல பிரதேச பாதையை அண்மையில் திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இவ்வரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் தெனியாய பிரதேச அபிவிருத்தி, மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் பொருட்டு பல்வேறுபட்ட விசேட அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தெனியாய நகரில் புதிய வைத்தியசாலையை அமைக்கும் பொருட்டு இடங்களை பெற்றுக்கொண்டோம். தற்போது அங்கே நிர்மானப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அது 500 கட்டில்களைக் கொண்ட தேசிய வைத்தியசாலையாகும்.
இங்குள்ள மக்களுக்கு கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்படாது. சேவா பியச எனும் முகாமைத்துவ கட்டிடத்தை இக்கிராமத்தினுள் அமைப்பதற்கு நடவடிக்கையெடுப்போம் என தெரிவித்துள்ளார்.