பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் 15ஆம் திகதி ஆரம்பமாகின்றது!

Report Print Murali Murali in அபிவிருத்தி

பலாலி விமான நிலைய அபிவிருத்தி மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்வரும், 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்திய மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்து இந்த இரண்டு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கப்படவுள்ளன. 15 மாதங்களுக்குள் இந்த அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன் பின்னர் பலாலி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை நடத்தப்படவுள்ளது. அத்துடன், காங்கேசன்துறை துறைமுகம் வழியாக, வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த அபிவிருத்தி பணிகளை சுமார் 2 பில்லியன் ரூபா செலவில் முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இதில் காங்கேசன்துறை முறைமுக அபிவிருத்திக்கு, இந்திய அரசாங்கம் 45.27 மில்லியன் டொலர் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.