மாதாந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தீர்மானம்

Report Print Rusath in அபிவிருத்தி

தற்போதுள்ள சனசமூக நிலைய வலையமைப்பினை மேலும் வினைத்திறனுடன் இயங்க வைக்கும் நோக்கில் பிரதேச செயலகப் பிரிவுகள் தோறும் சனசமூக நிலைய சம்மேளனத்தினை உருவாக்கி அதன் மூலம் மாதாந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு அபிவிருத்தி மைய திட்ட முகாமையாளர் ஜரீனா றபீக் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, வாகரை பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இன்று வாகரைப் பிரதேச சபையின் கீழ் இயங்கும் சனசமூக நிலையங்களின் வலையமைப்பு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இக் கலந்துரையாடல் கிழக்கு அபிவிருத்தி மையத்தின் அனுசரணையில் வாகரைப் பிரதேச சபையின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. ஹாரூன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

பிரதேசத்தில் இயங்கும் சனசமூக நிலையங்களை வினைத்திறனுடன் செயலாற்றத்தக்க வகையில் திட்டங்களை அமுல்படுத்துவதற்காக பல்வேறு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்திற்குப் பின்னரான சூழலில் சமூக மட்ட அமைப்புக்களைப் வலுவூட்டுவதன் ஊடாக உள்ளூராட்சி மன்றங்களின் ஜனநாயக ஆட்சியை மேம்படுத்தல் எனும் திட்டத்தின் கீழ் சன சமூக நிலையங்களை வலுப்படுத்தும் திட்டம் அமுலாவதாக கிழக்கு அபிவிருத்தி மைய திட்ட முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கிழக்கு அபிவிருத்தி மையத்தின் அனுசரணையுடன் சனசமூக நிலைய வலயமைப்பு உருவாக்கப்பட்டு மிகவும் வெற்றிகரமாக இயங்கி வருவதாகவும் பிரதேசத்தின் அபிவிருத்தி சமூகம்சார் பிரச்சினைகளை அடையாளம் கண்டு சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் கவனத்திற்கு கொண்டு சென்று வெற்றி கண்டுள்ளதாகவும் இதன் போது கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers