இலங்கையில் 250 பாலங்களை அமைக்க பிரித்தானிய அரசாங்கம் நிதியுதவி

Report Print Ajith Ajith in அபிவிருத்தி

இலங்கையில் 250 கிராமிய பாலங்களை அமைக்க பிரித்தானிய அரசாங்கம் நிதியளிக்கவுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக 49 மில்லியன் பவுண்ட்ஸ்களை வழங்கவுள்ளதாக பிரித்தானிய சர்வதேச வர்த்தக செயலாளர் லியாம் பொக்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நிதியுதவியின் மூலம் கிராம புற மக்களின் மற்றும் மாணவர்களின் போக்குவரத்து நலன்களை பாதுகாக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பிரித்தானிய அரசாங்கத்தின் உதவியின் கீழ் 2011 இல் 210 கிராமிய பாலங்களும், 2014இல் 618 பாலங்களும் செப்பனிடப்பட்டுள்ளன.