இந்த நாட்டின் சிறந்த எதிர்காலம் பிள்ளைகளின் கல்வியிலே தங்கியுள்ளது

Report Print Gokulan Gokulan in அபிவிருத்தி

கிராமத்து பாடசாலை பிள்ளைகளின் கல்வியிலே இந்த நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளமையால் இப்பிள்ளைகளின் கல்வி தரத்தை உயர்த்தும் பொருட்டு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்

மத்திய மாகாணம், பல்லேகம பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி இன்று இடம்பெற்றுள்ளது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கிராமத்து பாடசாலை பிள்ளைகளின் கல்வியிலேயே எம் நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது. இப்பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

இப்பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப வேண்டும். கல்வியுடன், விளையாட்டிலும் ஈடுபட்டு பிள்ளைகளின் ஒழுக்கம் மற்றும் தலைமைத்துவ பண்புகளை வளர்ப்பதற்கு எம்மாலான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இப்பிரதேச மந்திரி என்ற வகையில் இக்கிராமங்களிலுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்து பிள்ளைகளின் கல்வி தரத்தை முன்னேற்ற வேண்டிய தேவை எனக்குள்ளது.

பிரதேச மக்களின் வாழ்கையை இலகுவாக்கும் பொருட்டு பாதைகள், பாலங்கள், வடிக்கால்கள் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கிராமங்களை அபிவிருத்தி செய்து பொருளாதாரத்தை வலுப்படுத்தி எதிர்கால சந்ததியினருக்கு ஊழல் அற்ற சமூகத்தை கையளிப்பதே என்னுடைய எதிர்பார்ப்பாகும் என தெரிவித்துள்ளார்.